காலநிலை உடனடி நிவாரணம் அவசர தொலைபேசி இலக்கம்!!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் முகமாக அவசர தொலைபேசி இலக்கம் 117 வழங்கப்பட்டுள்ளது.

நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் காலி, மாத்தறை மாவட்டங்களின் தாழ்நில பிரதேசங்கள்வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக 382 குடும்பங்கள் வெள்ள அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. மேலும் 10 வீடுகள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 365 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அதேநேரம், காலி, மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தலா பத்து இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக 27 இலட்சம் ரூபாய் இரண்டு மாவட்டங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor