நீதிக்கு நீதி கோரி முல்லையில் போராட்டம்

முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் புறம்தள்ளி, அதனை அவமதிக்கும் வகையில் ஏற்கனவே திட்டமிட்டபடி நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகே பௌத்த பிக்குவின் தகனம் செய்தமைக்கு எதிராக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் மரபுப் பேரவை, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், சட்டத்தரணிகள் என பொது அமைப்புகளின் அழைப்பில் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் உண்ணாபுலவு வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமானது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று மனு ஒன்றைக் கையளித்தனர்.
நீதிமன்றக் கட்டளையை அவமதித்த பௌத்த பிக்குகளின் செயலுக்கும் அவர்களுக்கு துணை நின்ற பொலிஸாருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தும் மனுவே கையளிக்கபட்டது.

அத்துடன், நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்