தேரர்களால் வெட்கி தலை குனிகிறேன்

விகாராதிபதி உடலை வைத்து பெளத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இவர்கள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு நாம் வெட்கித் தலைகுனிகின்றோம். என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நீதிமன்றம் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய பொருத்தமான இடமொன்றை வழங்கியிருந்தது ஆனால் அதனை மீறி நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்தமாதிரி பெளத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளனர்.

இதற்கு கொழும்பில் இருந்து சென்ற தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் இன மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டும் இடத்தில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியை பிடிக்கத்துடிக்கும் ஒரு தரப்பினர் இயங்குகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்