மரண சடங்குக்கு சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கினர்.

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய பேருந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கோபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாயில் இருந்து நாவலபிட்டி பகுதிக்கு உறவினர்கள் சகிதம் மரண வீடு ஒன்றிக்குச் சென்று, மீண்டும் கந்தளாய் நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கோபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்