வடக்கு சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பில்

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று  சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்