நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல

நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லர் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அத்தோடு, தேரரின் உடலை ஆலயத்திற்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல்  தகனம் செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள் மீது பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே சட்டத்தரணி சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்