புத்தளத்தில் விபத்து – 7 பேர் படுகாயம்

புத்தளம்- அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிப்பாய்களுடன் பயணித்த பேருந்து, முன்னால் பயணித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச்சென்ற வானுடன் மோதியதில் இந்த விபத்து நேரந்துள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த பெண்களே படுகாயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள கருவலகஸ்வெவ பொலிஸார்,  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்