சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி மாணவிகள் சாதனை

விளையாட்டுத்துறை அமைச்சினால் பதுளையில் ஊவா மாகாண பொது நூலக மண்டபத்தில் நடத்தப்பட்டுவரும் தேசிய மட்டச் சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சதுரங்க அணி வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் தொடர் செயற்பாடுகளின் பயனாக மாவட்ட சதுரங்க வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட சதுரங்க அணியானது.

இந்நிலையில் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ள மாணவிகளை பலரும் பாராட்டியுள்ளனர்.

கடந்த 20ம் திகதி ஆரம்பமான இப்போட்டியானது எதிர்வரும் 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஒன்பது மாகாணங்களினதும் மாகாண விளையாட்டுத் திணைக்களங்களினால் நடத்தப்பட்ட மாகாணமட்ட போட்டிகளில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஒன்பது அணிகளும் இதில் பங்குபற்றும்.

இப் போட்டில் “றவுண்ட றொபின்” முறையில் அனைத்து அணிகளும் மற்றைய அணிகளுடன் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor