பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வேலி

மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று கொண்டு வருகின்றன.

அதற்கு அமைய அக்கரப்பத்தனை பிரதேச சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட பல பாடசாலைகளிலும் இவ்வாறான பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் பிரதேசசபை உறுப்பினர் திரு சிவானந்தன் அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

அந்த வரிசையில் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 20  இலட்சம் ரூபா  செலவில் பாடசாலையை சுற்றி பாதுகாப்பு வேலியும் அதிலும் அமைக்கப்பட்டு தற்பொழுது பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் லிந்துலை சுமண மகா வித்தியாலயத்திற்கு 35 லட்சம் ரூபாய் செலவில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பு கருதி இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ( கிருதமிழ்நியூஸ் செய்தியாளர் லிந்துல. சுரேஷ்)

Recommended For You

About the Author: Editor