12 கோடி ரூபா செலவில் காப்பட் வீதி

அக்கரபத்தனை பிரதேச சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட லிந்துலை ஊவாக்கலை  தோட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அண்மைக்காலமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் திரு சிவானந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் இருவேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடந்தேறியுள்ளன.
அதற்கமைய தலவாக்கலை எல்ஜின்  பிரதான வீதியின் ஊவர்ககலை  சந்தியிலிருந்து வெள்ளிமலை வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் தூரமுடைய பாதையானது கடந்த பல வருடங்களாகவே போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டு வந்தது.
அந்த வகையில் குறித்த பாதையினை  முழுமையாக தரமான காப்பட் வீதியாக புனரமைத்து தற்போது அது பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.  குறித்த பாதை அபிவிருத்திக்காக 12 கோடி ரூபா செலவில் காப்பட் இடப்பட்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல் ஊவாக்கலை  தோட்டத்தின் மூன்றாம் பிரிவில் 40 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் அன்றைய தினமே நடைபெற்றது. இதுவரை காலமும் லயன் குடியிருப்புகள் வாழ்ந்த மக்கள் தனி வீடுகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் மக்களுக்கான தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விழாவில் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு புத்திரசிகாமணி. அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான திரு சிவானந்தன்  தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார்.
மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் திரு சிவனேசன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
( கிருதமிழ்நியூஸ் செய்தியாளர் லிந்துல. சுரேஷ்)

Recommended For You

About the Author: Editor