பெற்றோல் குண்டு தாக்குதல்

தென்மராட்சி கிழக்கில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாவற்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடைமீது பெற்றோல் குண்டினை வீசியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த காவலாளி இது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்கம் மூடப்பட்டு இருந்தமையால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor