சீரற்ற காலநிலை கடற்றொழிலாளர்கள் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுவதாலும் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த 19ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி இயந்திர படகில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமல்போயுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரையோர பாதுகாப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் காணாமல்போனவர்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.


Recommended For You

About the Author: Editor