கிழக்கு மாகாணத்திலும் ஒரு வடிவேல் சுரேஷ்.!

ஜெயானந்த மூர்த்தி ஐயா, ஆசிரியராக, உடகாவியளாராக இருந்து, பின்னாளில் தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக கல்குடா தொகுதியில் இருந்து பாராளுமன்றம் சென்றவர்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, மக்களுக்கு செய்த சேவை வெறும் பூஜ்யமே.

ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேறுவதற்காக, தான் வசித்த வீட்டுக்கு தானே குண்டடித்து விட்டு கொப்பியை மாத்தி போட்டு வெளிநாட்டில் குடியேறினார்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று ஊடகங்கள் ஊடாக மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்.

நாட்டில் ஆசிரியர், அரசியல்வாதி என்று வாழ்ந்த ஜெயானந்த மூர்த்திக்கு வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து வாழ்வது கடினமாக இருந்ததால், மகிந்தவின் அழைப்பை ஏற்று மீண்டும் தாயகம் திரும்பினார்.

மறுபடியும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து இருந்து செயல்படுவது போல பாசாங்கு செய்தார்.

முறாவோடையில் நடந்த ஒரு நிகழ்விற்கு திரு ஜெயானந்த மூர்த்தியும், திரு கோவிந்தன் கருணாகரனும் (ஜனா) பிரதம அதிதியாக கலந்து கொண்ட வேளை, ஜனாவை மேடையில் வைத்து அசிங்கப்படுத்தி, ஜனாவின் மக்கள் ஆதரவை குறைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் மீண்டும் கால் ஊண்றுவதற்காக ஒருவரை தயார் செய்து ஜனாவை மேடையில் வைத்து அவமானப் படுத்தினார். இவரை மக்களோ அல்லது தமிழ் தேசிய குட்டமைப்போ பொருட்படுத்த வில்லை.

பின்னர் இருந்த இடத்தில் இருந்து அடித்தார் வெல்டி UNP கு. அதில் கல்குடா தொகுதி மக்களுடைய வாக்குகளை சேகரித்து சோனி அமீரலியை பாராளுமன்றம் அனுப்பி அதனுடாக அமீரலியிடம் இருந்து சில தேங்காய் துண்டுகளை சல்மானாக பெற்றார் திரு ஜெயானந்த மூர்த்தி.

கல்குடா தொகுதியில் தமிழ் மக்களிடம் UNP கு என்று பெரிய வரவேற்ப்பு இல்லாததை உணர்ந்தவர் மீண்டும் அடித்திருக்கிறார் அடுத்த வெல்டி  தனது முதலாளி மகிந்தவின்  பொதுஜன பெரமுனைக்கு.

இப்படி வெல்டி மேல் வெல்டி அடித்து திரியும் அரசியல் குரங்கு ஜெயானந்த மூர்த்தியின் அடுத்த வெல்டி முஸ்லீம் காங்கிரஸாக இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மக்கள் நிதானமாக இருந்தால் எந்த அரசியல் நடிகனாலையும் ஒன்றையும் புடுங்க முடியாது.


Recommended For You

About the Author: Editor