வடக்கு பாடசாலைகளிற்கு ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டுள்ளது.

அத்துடன் அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும்போது

மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் ,ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தனிப்பட்ட கவனத்தினை செலுத்தி மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல பாடசாலை அதிபர்களிற்கும் தெரிவித்து இதனை 2020ம் ஆண்டில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பான அறிக்கையினை சகல கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும் பெற்று சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor