1,50,000 பிரித்தானியர்கள் பாதிப்பு!!

உலகின் பழமையான பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாம்ஸ் குக் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 178 ஆண்டு பழமையான குறித்த நிறுவனத்தை காப்பாற்ற தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 200 மில்லியன் டொலர் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாமஸ் குக் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிறுவனத்தை மீட்க கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும், பங்குதாரர்களுக்கும் புதிய பண வழங்குநர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நிறுவனத்தின் தலைமை ஆணையம், உடனடியாக நிறுவனத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என முடிவு செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், பிரித்தானியா நிறுவனமான தாமஸ் குக்கின் மிகப்பெரிய பங்குதாரரான சீனாவின் ஃபோசுன் குழு, நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பில் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை , உலகளவில் குறித்த நிறுனவத்தில் பணியாற்றிய 21,000 ஊழியர்களில் 9,000 பிரித்தானியர்கள் இப்போது தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

இதனையடுத்து, நிறுவனத்தின் அனைத்து விமான பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தாமஸ் குக் விமானத்தில் நாடு திரும்ப திட்டமிட்டு இருந்த சுமார் 1,50,000 பிரித்தானியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் சிவில் ஏவியேஷன் ஆணையமும், அரசாங்கமும் தாமஸ் கூக் பயணிகளை புதிய விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த திடீர் நடவடிக்கையின் விளைவால், உலகம் முழுவதும் சுமார் ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகள் தவிக்கின்ற நிலையில் அதில் பலரது டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆவார்.

தாமஸ் குக் உடனான உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை, நீங்கள் முன்பதிவு செய்திருந்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெற அல்லது உங்கள் பயணத் திட்டத்தைத் தொடர நீங்கள் என்ன செய்யலாம் பயன்படுத்தலாம் என்ற தகவல்தான் இது.

தாமஸ் குக் வாடிக்கையாளர்களுக்கான உதவி தொலைபேசி எண் +44 1753 330 330 வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏ) வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு வலைத்தளத்தையும் (thomascook.caa.co.uk) உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வலைத்தளத்தின் மூலம் அனைத்து தகவல்களையும் பெறலாம்.

மேலும், டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படும் வரை வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தாமஸ் குக் இந்தியா நிறுவனம், செப்டம்பர் 21 அன்று இங்கிலாந்தின் தாமஸ் குக் பி.எல்.சி உடன் தொடர்புடையது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

தாமஸ் குக் இந்தியா முற்றிலும் தனி நிறுவனம் மற்றும் கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமானது. எனவே, தாமஸ் குக் பி.எல்.சி மூடப்படுவது இந்திய நிறுவனத்தை பாதிக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில், தாமஸ் குக் யுகே, தாமஸ் குக் இந்தியாவின் பங்குகளை ஃபேர்ஃபாக்ஸுக்கு விற்றது.

தாமஸ் குக் இந்தியாவுக்கு, தாமஸ் குக் பி.எல்.சி (இங்கிலாந்து) உடன் எந்த தொடர்பும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே பயணிகள் தாமஸ் குக் இந்தியாவில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் மற்றும் அதன் அனைத்து வசதிகளும் முன்பு போலவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor