விமானப்படை வீரர் சடலமாக மீட்பு!

திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாபிள் பீச் பிரதேசத்தில் விமானப்படை வீரரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சீனன் குடா விமானப்படை தளத்தில் கடமையாற்றும் வீரர் ஒருவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ஓகந்த வீதி, பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த E.A.D.K.எதிரிசிங்க எனும் வீரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விமாப்படை வீரரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விமாப்படை வீரரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறியும் பொருட்டு மேலதிக விசாரணையை சீனன் குடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor