இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி

இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.

வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குடியேற்றத் திட்டத்தின் பிரகாரம் பணி மற்றும் குடியேற்றத் திட்டங்களின் அடிப்படையில் கனடாவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

கனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கனடாவில் தொழில் வாய்ப்பு ஒன்றை உறுதி செய்து கொண்டு அங்கு செல்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் எனவும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களில் பயணம் செய்வோர் வீசா இன்றி 90 நாட்கள் வரையில் கனடாவில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அடுத்த வாரம் இணையத்தில் பிரசூரிக்கப்படும் எனவும் சுமார் ஆறு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது


Recommended For You

About the Author: Editor