
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, மாவடிச் சந்தியிலுள்ள கடையொன்று திடீரென தீப்பற்றி, எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வெற்றிலை வியாபாரம் இடம்பெறும் பெட்டிக்கடையே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மின்னிணைப்பு இல்லாத கடைக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டதா அல்லது கடைக்குள் தீ விபத்து இடம்பெற்றதா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.