மக்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியாவேன் – சஜித்!!

எமது நாட்டிலுள்ள சகல மக்கனினதும் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது மாத்திரமன்றி, இவர்களது ஆசீர்வாதத்துடன் வெற்றியும் பெறுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களை அவதானித்தால் அனைவருடைய கேள்வியும் சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பதாகும்.

யார் என்னதான் கருத்துக்களை தெரிவித்து முட்டுக்கட்டைகளை போட்டாலும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுவேன் என்பதை அவர்களுக்கு அறிவிக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரிவில் முலன்யாய கிராமத்தில் நிர்மாணித்த மாதிரிக்கிராமங்களை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor