எலிக்காய்ச்சலால் பாதிக்கப்ட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும், காலியில் 321 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor