வேலைதேடும் பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமது மகஜரை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன மத பேதம் இல்லாமல் நல்லாச்சியை நடாத்தும் அரசாங்கம் எந்த விடயத்திலும் பேதமை காட்ட கூடாது என வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பு இருந்த அரசாங்கத்தினால் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்க முடியும் என்றால் தற்போதய அரசாங்கத்தினாலும் வேலை வழங்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைமைத்துவங்களிடம் தமது நியமனம் குறித்து கதைக்க போனால் அவர்கள் தேர்தல் முடியட்டும் பிறகு கதைப்பம் என கூறுகின்றார்கள் என வேலையில்லா பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்