கொலை சந்தேகநபர்களின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாபிட்டிய வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தால் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் 2 மணி அளவில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களை பொலிஸ் தலைமையகம்  வெளியிட்டுள்ளது.

புகைப்படங்கள் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  அலைபேசி மற்றும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எஹலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071-8591402
எஹலிய கொடை பொலிஸ் நிலையம் – 036-2258222


Recommended For You

About the Author: ஈழவன்