மகிழுந்து இல்லாத நாள்! – மூடப்பட்ட பல்வேறு தொடருந்து நிலையங்கள்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் மகிழுந்து இல்லாத நாளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பல்வேறு தொடருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இது ஐந்தாவது ‘மகிழுந்து இல்லாத நாள்’ ஆகும். பரிஸ் நகரமண்டபத்தினால் இந்த நாள் கொண்டுவரப்பட்டுள்ளது. பரிசுக்குள் மகிழுந்து ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, நான்கு மெற்றோ நிலையங்களும் மூடப்பட்டன.
முதலாம் வழியில் Argentine நிலையமும், 8, 12, 14 ஆம் வழியில் Madeleine நிலையமும், முதலாம் மற்றும் ஒன்பதாம் வழியில் F. Roosevelt நிலையமும், முதலாம் 13 ஆம் வழியில் Champs-Élysées – Clemenceau நிலையமும் மூடப்பட்டன
மஞ்சள் மேலங்கி போராளிகள் போராட்டம் நடத்தும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக இந்த நிலையங்கள் மூடப்பட்டன.

Recommended For You

About the Author: Editor