பள்ளிவாசலுக்குள் பாய்ந்த மகிழுந்து! – கத்தி குத்து தாக்குதல்..!!

நேற்று சனிக்கிழமை இரவு நபர் ஒருவர் மகிழுந்தை இஸ்லாமிய பள்ளிவாசலுக்குள் செலுத்தியுள்ளார்.

இச்சம்பவம் Colmar நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. இரவு 8 மணிக்கு சற்று முன்னதாக, நபர் ஒருவர் மகிழுந்தை பள்ளிவாசலுக்குள் செலுத்தியுள்ளார்.

இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் மகிழுந்தில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் கத்தி என்றை எடுத்துள்ளார். இதனால் பள்ளிவாசலுக்குள் இருந்த நபர்கள் அனைவரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனால் எதிர்பாரா விதமாக குறித்த நபர் தன்னைத்தானே கத்தியால் தாக்கிக்கொண்டார். உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிய முடிகிறது. மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor