ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் யூரோக்கள்

எலிசே மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக்கூடம் இம்மாதத்துடன் ஒரு வருட நிறைவை கொண்டாடுகின்றது.
இந்த ஒருவருடத்தில் €1M யூரோக்கள் விற்பனையை சந்தித்துள்ளது. செப்டம்பர் 14 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு இந்த விற்பனைக்கூடத்தை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆரம்பித்து வைத்திருந்தார்.
இங்கு பிரான்சை அடையாளப்படுத்தும் முகமாக கைக்கடிகாரங்கள், மணிக்கட்டு காப்புக்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த ஒருவருடத்தில் 38,500 பொருட்களை விற்று இந்த விற்பனைக்கூடம் சாதனை படைத்துள்ளது. மொத்தமாக ஒரு மில்லியன் யூரோக்கள் வருவாயை ஈட்டியுள்ளது.
தவிர, விரைவில் இந்த விற்பனை நிலையத்தில் விற்பனையை அதிகரிக்கவும், சுற்றுலாப்பயணிகளுக்கு இலகுவாக்கவும் ‘ஆங்கிலத்தில்’ மொழிமாற்றம் செய்யப்பட்டு கடை நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது. €100,000 கள் செலவில் இந்த கடை நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor