கஞ்சா வளர்த்த கீரிமலை வாசி கைது

சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்த குற்றச்சாட்டில் கீரிமலைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், அங்கு கஞ்சா போதைப்பொருளை வாங்குவதற்கு வந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கீரிமலை பகுதியில் உள்ள வீடு  சிவில் உடை தரித்த பொலிஸாரினால் இன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீட்டுத் தோட்டத்துக்குள் மறைவாக வளர்த்த மூன்று கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் வீட்டில் கஞ்சாவினை கொள்வனவு செய்ய வந்திருந்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து எட்டு கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்