சேரன், லாஸ்லியா ஒன்றாக வெளியேற்றம்

சேரனையும், லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியேற்றினார் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே வருமாறு அழைத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம் இதனால் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டிச்செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

இந்த புரமோ ரசிகர்களை குழப்பும் வகையில் உள்ளது. ரசிகர்கள் ஏமாற்றம் அதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றே சேரன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

ஒன்றாக வாருங்கள் இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் ஷெரின் காப்பாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் குழப்பம் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் லாஸ்லியாவையும் சேரனையும் ஒன்றாக விடைபெற்று வெளியே இருக்கும் அறைக்கு வருமாறு அழைக்கிறார் கமல்.

பிரியாவிடை அந்த புரமோவில் கமல் பேசுவதாவது, லாஸ்லியா நீங்கள் ஆசைப்பட்டப்படி நீங்களும் சேரனும் பிரியாவிடை பெற்றுகொண்டு பிக்பாஸ் ரூமுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார்.

இதனை தொடர்ந்து சேரன், தர்ஷன், சாண்டி, முகென், ஷெரின் ஆகியோரிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இப்போதாவது கேள் பெட்ரூமில் தனது துணிகளை எடுத்து வைக்கும் லாஸ்லியாவிடம், இப்போதாவது நான் சொல்வதை கேள் என்கிறார் கவின்.

அதற்கு லாஸ்லியா, ப்ளீஸ் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று கூறுகிறார். இப்படியாக முடிகிறது அந்த புரமோ. ரசிகர்கள் குழப்பம் இதனை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவை சீக்ரெட் ரூமுக்குள் அனுப்பப்போகிறாரா பிக்பாஸ்.

அல்லது கதவு வரை அழைத்து லாஸ்லியா நீங்கள் திரும்பி போங்க என இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகிறாரா என குழம்பி வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor