போலியான ஆவண தயாரிப்பு – மூன்று பேர் கைது

வத்தளை, கல்யான மாவத்தை பிரதேசத்தில் போலியான ஆவணங்களை தயாரிக்கும் இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, அவ்விடத்தில் இருந்து 18 போலியான அதிகாரப்பூர்வ முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போலியான ஆவணங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, கனேமுல்ல மற்றும் மரதன்கடவல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor