வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

நில்வளா மற்றும் கிங் கங்கை பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நில்வளா கங்கையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையிலும் மற்றும் கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தும் காணப்படுகிறது.

அதன்படி, நில்வளா கங்கையை அண்டிய பானந்துகம, பிடபெத்தர மற்றும் ஊரவ பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் கங்கையின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை, கடவத் சதர, திஹகொட,மாலிம்பட, கம்புறுபிட்டிய, அதுரலிய, அகுரெஸ்ஸ, பிடபெத்தர பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் வௌ்ளப்பெருக்கு நிலையில் தம்மை பாதுகாத்துக் கொள்ள அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor