
ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூரினை ஏற்படுத்தும் வகையில் இடமாற்றங்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக அமைச்சிற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் தற்போது சேவையாற்றும் இடத்திலேயே தொடர்ந்தும் பணிபுரிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஓய்வுபெறவுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறும் வகையில், அரச வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
தேர்லுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள தினத்திலிருந்து தற்போது வரை இதுகுறித்து ஆறிற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுவரை தமது அமைப்பிற்கு 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
சில அரச நிறுவனங்களில் நேர்முகப்பரீட்சைகள் நடைபெறுவதாகவும் தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.