ஊத்தை சேதுவையும் சுவிஸ் குமாரையும் காப்பாற்றிய விஜய கலா

எமது இணையத்திற்கு சில முக்கிய ஆதாரங்கள் கசிந்துள்ளது தற்போது அமைச்சராக இருக்கும் வியஜகலா, ஊத்தை சேதுவை விடுதலை செய்யுமாறு நீதித்துறை அமைச்சுக்கு கடிதம் எழுதி. அதனூடாக ஊத்தை சேதுவை விடுதலைசெய்துள்ள விடையம், ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் தேர்தல் நடைபெற்ற வேளை, அரச வாகனம் ஒன்றை நோர்வே நாட்டில் இருந்து வந்த ஊத்தை சேது ஓட்டிச் சென்றுள்ளார்.

அதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான பல போஸ்டர்கள் இருந்துள்ளது. தேர்தல் வேலைகளுக்காக அரசு வாகனம் பயன்படுத்தப்படுவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதே நேரம் நோர்வே பிரஜையான நடராஜா சேதுரூபன்(ஊத்தை சேது) உல்லாசப்பயணிகள் விசாவில் இலங்கை சென்று அங்கே அரசியலில் ஈடுபட்டதும் அன்றே பிடிபட்டது. அவரை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்தவேளை.

வெறும் லைசன் இல்லாமல் மட்டுமே வாகனத்தை அவர் ஓட்டிச் சென்றார் என்றும். எந்த ஒரு அரசியலிலும் அவர் ஈடுபடவில்லை என்றும், வழக்கை அமைச்சர் விஜயகலா திசை திருப்பி, இலங்கை நீதித்துறையை தனது செல்வாக்கை பயன்படுத்தி ஏமாற்றியுள்ளார்.

சேதுவை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அமைச்சர் எழுதிய கடிதம் இதோ அதிர்வு இணையத்தில் பிரசுரமாகியுள்ளது.

தற்போது மக்களை மிரட்டி கப்பம் பெற்றார் என்ற குற்றத்திற்காக இலங்கை பொலிசாரால் தேடப்பட்டு வரும் ஊத்தை சேது, இலங்கையில் தலைமறைவாகியுள்ள நிலையில்.

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் மிக முக்கிய குற்றவாளி என கருதப்படும் சுவிஸ் குமாரையும், அமைச்சர் விஜயகலா தான் கொழும்புக்கு அனுப்பிவைத்தார் என்பது ஊர் அறிந்த உண்மை.

ஷஇவ்வாறு பல கிரிமினல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைச்சர் விஜயகலா உடனடியாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும் என்று, கொழும்பில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்படவுள்ளதோடு. அமைச்சரின் இந்தச் செயலை உடனடியாக ஐக்கிய தேசிய கட்சி விசாரிக்குமா ?

இலங்கை நீதித்துறையை ஒரு அமைச்சரே ஏமாற்றியுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாக நிரூபனமாகியுள்ள நிலையில், அமைச்சர் விஜயகலா அவர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகிறது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.


Recommended For You

About the Author: Editor