திலகராஜ் அமெரிக்கா பயணம்!

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

அவர் இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழு கூட்டத்தில் சிறப்புரையாற்றும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைமை குறித்து அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுடன் செனகல், சோமாலியா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor