ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடும் நால்வர் பரிசில் கைது..!!

ஆடம்பர கைக்கடிகார திருட்டில் தொடர்புடைய நால்வரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பல்வேறு நீண்ட வழங்குகளை கொண்ட இவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளர். வியாழக்கிழமை இரவு பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் Avenue Niel வீதியில் குறித்த நால்வர் நபர் ஒருவரின் கைக்கடிகாரத்தை திருடுவதற்கு திட்டம் தீட்டியிருந்தனர்.

பின்னர் அந்த நபரை தாக்கி அவரிடம் இருந்து ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார்.

சில நிமிடங்களில் காவல்துறையினர் குறித கொள்ளையர்களை 18 ஆம் வட்டாரத்தின் rue Raymond-Queneau வீதியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இதேபோன்ற பல்வேறு வழங்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளை இலக்குவைத்து இவர்கள் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கைக்கடிகாரங்களை திருடியுள்ளனர்.

விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.


Recommended For You

About the Author: Editor