பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட கர்ப்பிணி பெண்! – விபத்தில் பலி..!!

பாடசாரி கடவையை கடக்க முற்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் மகிழுந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Montpellier (Hérault) நகரில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் Liberté Avenue வீதியில் உள்ள பாதசாரி கடவையை இளம் பெண் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார்.

23 வயதுடைய அப்பெண் கர்ப்பிணி பெண் என அறிய முடிகிறது. அதன் போது வீதியில் வேகமாக வந்த மகிழுந்து ஒன்று அப்பெண்ணை இடித்து தள்ளியுள்ளது.

மணிக்கு 50 கி.மீ அதிகபட்ச வேகம் கொண்ட அவ்வீதியில் குறித்த மகிழுந்து 100 கி.மீ வேகத்தில் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விபத்தின் போது வாகனத்துக்கு அனுமதி வழங்கும் முகமாக பச்சை நிற சமிக்ஞை எரிந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BMW நிறுவனத்தைச் சேர்ந்த அவ் மகிழுந்தின் சாரதி தேடப்பட்டு வருகின்றார்.


Recommended For You

About the Author: Editor