மஹிந்தவை அவமதித்த குற்றசாட்டு – 8 ஊடகவியலாளர்கள் விடுதலை.

கடந்த 2012ஆம் ஆண்டு குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட 8 இணையத்தள ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவமதித்தமை மற்றும் தேசதூரோகம் இழைத்தமைக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு 8 இணையத்தள ஊடகவியலாளர்கள் குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதையடுத்து குறித்த 8 பேரும் இது வரை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று குற்றத்திலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்