அக்கரபத்தனை கிளாண்லைன் தோட்டத்தில் 40 வீடு அமைக்க அடிக்கல்

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட கிளாண்லைன் தோட்டத்திற்கு இன்று 40 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது .

அத்தோடு குறித்த தோட்டத்தில் ஏற்கனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகளை இன்றையதினம் மக்களிடம் ஒப்படைத்ததோடு அவர்களுக்கான வீட்டு உறுதிப்பத்திரம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக டிரஸ்ட் Trust நிறுவனத்தின் தலைவர் புத்திரசிகாமணி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

அவருடன் குறித்த நிகழ்வில் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தன் தேசிய தொழிலாளர் சங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி விஜயகுமார் மற்றும் பலரும் கலந்துகொணீடிருந்தனர்.

அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மலையகமெங்கும் தனி வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கிளாண்லைன் தோட்ட மக்களுக்கு தனி வீடுகள் அவரவர் பெயருக்கு உரித்துடையதாக வழங்கப்பட்டது வரலாற்று முக்கிய்த்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும்.

அத்தோடு மேலும் 40 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

லிந்துல. சுரேஷ்


Recommended For You

About the Author: Editor