முன்னாள் நீதியரசர் ஷிராணி ஜனாதிபதி தேர்தலில்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஷிராணி பதிலளித்துள்ளார்.

நாட்டின் அரசியல் விடயத்தில் மக்களின் தீர்மானமே முக்கியமானது எனவும் மக்கள் விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஷிராணியிடம், ஜ

னாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிட போவதாக கூறப்படுகின்றது. அது உண்மையா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஷிராணி, ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப்போவதாக பேசப்படுகிறதா என புன்னகையுடன் கேட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் தெரிவித்த அவர், “நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பது மக்களின் விருப்பமாகும்.

அத்துடன் இதுவரை காலமும் மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை சிறந்த முறையில் ஆற்றியுள்ளேன். இனியும் என்னால் முடிந்த சேவைகளை மக்களுக்காக தொடருவேன். அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து தீர்மானிக்கவில்லை.

ஆனால் மக்களின் வேண்டுகோளின் பேரில் மாத்திரமே அரசியலில் பிரவேசிப்பேன். எனக்கு வேண்டியது நாட்டின் அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் மாத்திரமே ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor