மோடிக்கு குடை பிடித்த மைத்திரி!!

இலங்கைக்கு உத்தியோகபூா்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமா் நரேந்திரமோடியை வரவேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா இந்திய பிரதமருக்கு குடை பிடிக்கும் காட்சிகள் தொடா்பாக சமூக வலைத்தளங்களில் ஆதரவான கருத்துக்களும், விமா்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக பேஸ்புக் ஊடாக இந்த விமா்சனங்களும், ஆதரவான கருத்துக்களும் அதிகளவில் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு வாளி வைக்கிறாா் என்றும், ஆசியாவின் ஆச்சாியம் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி குடை பிடிப்பது என்றும் பல விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. இதேபோல்

ஜனாதிபதி குடை பிடித்ததன் ஊடாக தன்னடக்கத்தை காட்டுகிறாா் என்றும், சகோதரத்துவத்தை விரும்புகிறாா் என்றும் சாதகமான கருத்துக்களும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.


Recommended For You

About the Author: Editor