லாஸ்லியாவால்! கவின்-சாண்டி இடையே பிளவு!!

பிக்பாஸ் 3 துவங்கியது முதலே கவின் மற்றும் சாண்டி இருவரும் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் வெளியிலேயே பல வருடம் நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் இங்கும் நெருக்கம் என கூறினர்.

இந்நிலையில் இன்று லாஸ்லியா பேசிய ஒரு விஷயம் கவின்-சாண்டி இருவருக்கும் இடையே மனக்கசப்பை உருவாக்கியுள்ளது.

தங்க முட்டையை பாதுகாக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட டாஸ்கில் சாண்டி முதல் ஆளாக வெளியேறிவிட்டார். ஆனாலும் அவர் தூங்காமல் தர்ஷன் மற்றும் முகேன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார்.

கவின்-லாஸ்லியா ஓரத்தில் அமர்ந்துகொண்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தர்ஷன் லாஸ்லியாவின் முட்டையை உடைத்துவிட்டார்.

அதன்பிறகு இது பற்றி ஒரு பெரிய வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது பல்லை காட்டிக்கொண்டிருந்தது என் தப்பு தான் விட்டுடுங்கள் என லாஸ்லியா கூறினார்.

கவினுக்கு எதிராக சாண்டி செயல்படுகிறார் என ஒரு கருத்தை கூறினார். இந்த வாரம் நடந்த மற்ற டாஸ்குகளிலும் சாண்டி கவினுக்கு கடைசி இடம் தான் கொடுத்தார், அது வருத்தமாக இருந்தது என லாஸ்லியா கூறினார்.

இதனால் இன்று கவின் மற்றும் சாண்டி இடையே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor