கீழ் ரதல்ல மகா தமிழ் வித்தியாலயத்திற்கு அமைச்சரால் அதிஸ்டம்

கீழ் ரதல்ல மகா தமிழ் வித்தியாலயத்தை சுற்றி 1000 அடி நீளமுள்ள வேலி  அமைக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் தேசியத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவருமான திரு சிவானந்தன் அவர்களின் ஆலோசனைக்கமைய மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரதல்ல மகா தமிழ் வித்தியாலயத்தை சுற்றி 1000 அடி நீளமுள்ள வேலி  அமைக்கப்பட்டுள்ளது. .

இதற்கென 20 லட்சம் ரூபா நிதியினை மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது .

இதன்மூலம் பாடசாலை வளாகம் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது .
அத்தோடு குறித்த அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் விளையாட்டு மைதானத்தை சுற்றி கருங்கல்லாலான பாதுகாப்பு மதில் ஒன்றினை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன .
இதற்காக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு அதற்கமைய  அதன் முதற் கட்டமாக 150 அடி நீளம் கொண்ட  மதில் நிர்மாணம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
அத்தோடு குறித்த மைதானத்தை சுற்றி முழுமையாக பாதுகாப்பு மதில் அமைக்க வேண்டுமெனில் மேலும் விதி தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அக்கரைப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக பெரிய மட்டுக்கலை  தோட்ட விளையாட்டு மைதானத்துக்கு பொறுப்பான நிர்வாக குழு தெரிவித்தது.
லிந்துலையில் இருந்து kirutamilnews  செய்தியாளர் சுரேஷ்

Recommended For You

About the Author: Editor