நிகாப் , முகம் மறைத்த தலைகவசம் மீதான தடை நீக்கம்

நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளமை காரணமாகவே குறித்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால், தபால் சேவை மற்றும் முஸ்லீம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.


Recommended For You

About the Author: ஈழவன்