11 ஆம் இலக்க மெற்றோவில் மேலும் மூன்று நிலையங்கள்…!!

11 ஆம் இலக்க மெற்றோவில் மேலதிகமாக மூன்று நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த விரிவாக்கலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக இடம்பெற்று வரும் நிலையில், மேலதிகமாக மூன்று நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்கப்பணி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பரிசின் கிழக்கு பிராந்தியத்தை நோக்கி செல்லும் 11 ஆம் இலக்க மெற்றோ மேலும் விரிவடைய உள்ளது. 2023 ஆம் ஆண்டை இலக்கு வைத்து இந்த வழியில் மேலதிகமாக மூன்று புதிய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Les Lilas நகரில் இருந்து Rosny-sous-Bois நகர் வரை இந்த வழி விரிவடைய உள்ளது. மொத்தமாக 6 கி.மீ தூரம் எனவும், ஒரு நாளைக்கு 12 மீற்றர் வரையான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.3 பில்லியன் யூரோக்கள் செலவில் இந்த புதிய விரிவாக்கல் பணி அமைக்கப்பட உள்ளது.


Recommended For You

About the Author: Editor