இவ்வருடத்தில் 109 பெண்கள் குடும்ப வன்முறையில் பலி..!!

இவ்வருடத்தில் மட்டும் இதுவரை 109 பெண்கள் குடும்ப வன்முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 121 பெண்கள் தங்கள் கணவர்/ முன்னாள் கணவர் மற்றும் காதலனால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் வன்முறைக்கு ஆளாகியிருந்தனர்.

இந்நிலையில், இவ்வருடத்தில் இன்று வரை 109 பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். 109 ஆவது சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

Maisons-Laffitte, (Yvelines) நகரில் இன்று காலை 30 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி இப்பெண் உயிரிழந்துள்ளார். காலை 9:30 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 2 வயது மகள் உள்ளதாக அறிய முடிகிறது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor