மகிழுந்து திருட்டு! – IGPN சிறப்புப்படையிடம் சிக்கிக்கொண்ட நால்வர்..!!

மகிழுந்தை திருட முற்பட்ட நால்வர் IGPN சிறப்பு படையினரிடம் சிக்கிகொண்டுள்ளனர்.

இச்சம்பவம் Essonne மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரின் குற்றங்களை கவனிக்கும் IGPN அதிகாரிகள் Guillerval நகர மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

பின்னர் பயிற்சியை முடிந்துக்கொண்டு வெளியேறும் போது நான்கு நபர்கள் மகிழுந்து திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் மூன்று மகிழுந்துகளை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, IGPN அதிகாரிகள் ஜோந்தாமினருக்கு தகவல் தெரிவித்து திருடப்பட்ட மகிழுந்து தொடர்பான விபரங்களையும் தெரிவித்தனர்.

சில நிமிடங்களின் பின்னர் மகிழுந்துகளை திருடிச்சென்ற நால்வரும் கைது செய்யப்பட்டனர்.


Recommended For You

About the Author: Editor