வெனிசுவேலா – கொலம்பிய எல்லை! திறப்பு

வெனிசுவேலா – கொலம்பிய எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களின் பின்னர் இந்த எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசுவேலா – கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசுவேலா ஜனாதிபதி கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இதனால், வெனிசுவேலா மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டதுடன் பலர் நாட்டை விட்டும் வெளியேறியிருந்தனர்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் எல்லை திறக்கப்பட்டதன் பின்னர் 10,000 இற்கும் மேற்பட்ட மக்கள், தமக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதாக, தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கைடோ தம்மை தாமே அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor