யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் அதிரடியாக கைது!

யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் சற்று முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கையும் களவுமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரை கைது செய்ய முயற்சிக்கப்பட்ட போது தப்பித்துக் கொண்டார்.
எனினும் சற்று முன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் போதிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடா்பாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor