‘தர்மபிரபு’ படத்துடன் கனெக்சன் ஆன ‘அடுத்த சாட்டை’

யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

எமதர்மன் கேரக்டரில் யோகிபாபு நடித்த இந்த படம் தற்கால அரசியல் குறித்த கிண்டலான வசனங்கள் மற்றும் காமெடியாக இருந்ததல் ரசிகர்களை கவர்ந்த படமாக மட்டுமின்றி எதிர்பார்த்த வெற்றியை பெற்றது.

இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தில் ரங்கநாதன் என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் இதே ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் அவர்கள் தற்போது சமுத்திரக்கனி நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘அடுத்த சாட்டை என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளார்.

இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

சமுத்திரகனி, தம்பி ராமையா, ஜூனியர் பாலையா, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான எம்.சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஜஸ்டீன் பிரபாகரன் இசையில் ராசாமதி ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.அன்பழகன் இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற படத்தின் அடுத்த பாகம் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor