அரசியலுக்கு வருகிறாரா சிம்பு?

நடிகர் சிம்பு தற்போது தாய்லாந்து நாட்டில் இருந்து வரும் நிலையில் விரைவில் அவர் சென்னை திரும்பவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை திரும்பியதும் சிம்பு தனது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாகவும் இந்த சந்திப்பில் ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிம்புவிடம் சில திட்டங்கள் இருப்பதாகவும், அதனை நிறைவேற்றவும், சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாகவும் சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சிம்பு அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் சிம்பு தனது தந்தையின் கட்சியில் இணைவாரா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சிம்பு தற்போது ஹன்சிகாவின் ‘மஹா’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கவுதம் கார்த்திக்குடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிம்பு சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்த ‘மாநாடு’ படத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் ‘மகாமாநாடு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor