பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா, சாண்டி, முகின், தர்ஷன், சேரன் மற்றும் ஷெரின் ஆகிய ஏழு பேர்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்களில் இருவர் வரும் வாரங்களில் வெளியேறியவுடன் ஐவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர்.

இந்த நிலையில் இந்த வாரம் கவின், லாஸ்லியா, சேரன் மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் கவின் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டதாகவும், லாஸ்லியாவும் சேரனும் ஷெரினை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் இன்று ஷெரின் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தினால் முடிவு மாறவும் வாய்ப்பு உண்டு. எனவே நாளை வரை காத்திருந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Recommended For You

About the Author: Editor