
பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கணை தர்ஜினி சிவலிங்கமும் பங்கேற்றுள்ளார்.
பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலை மாணவர்களும் இன்று காலை வகுப்பறையை விட்டு வெளியேறி வீதியிலிறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்போது அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கணை தர்ஜினி சிவலிங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
காலநிலை மாற்றத்தால் பூமி எதிர்கொள்ளவுள்ள விளைவுகளை உலகெங்கிலும் உள்ள மாணவர்களும் ஏனையவர்களும் ஒரே குரலில் பேசுவதே இந்த போராட்டத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.